துறைமுகத்தின் மீது போர்விமானங்கள் மூலமாக ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியாவின் அரசு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. மேலும் சிரியாவின் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்நாட்டின் லடாக்கியா துறைமுகத்தின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் மூலமாக ஏவுகணைகளை ஏவியுள்ளதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக துறைமுகத்தில் ஆயுதங்கள் இருந்த கண்டெய்னர்கள் நிறைந்த பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சேதமாகிவிட்டது. இருப்பினும் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.