Categories
மாநில செய்திகள்

திறக்கப்படுமா திரையரங்குகள்…?

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. பல்வேறு தளர்வுகள் உடன் வணிக வளாகங்கள் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் திரையரங்குகளை திறக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

நேற்று பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை மனுவை நேரில் அளித்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளை உரிய பாதுகாப்புடன் திறப்பது குறித்து வரும் 28ஆம் தேதி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

Categories

Tech |