Categories
உலக செய்திகள்

துருக்கியில் வேகமெடுக்கும் கொரோனா…. கடந்த 24 மணிநேரத்தில் 341 பேர் உயிரிழப்பு….!!!

துருக்கியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது.

புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரசின் தாக்கம்  மீண்டும் நாடு முழுவதும் பரவி வருகிறது. அந்தவகையில் துருக்கியில் கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும் 55149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 43,23,596 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,267 ஆகவும் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 37,36,537- ஆக உள்ளது .  கொரோனா தொற்றால்  சிகிச்சை பெற்றிருப்பவர்கள் எண்ணிக்கை 5,50,792- ஆகும்.  கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும் 341 பேருக்கு உயிரிழந்துள்ளதாக  உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |