பானிபூரியில் புழுக்கள் இருந்ததை கண்டுபிடித்த பொதுமக்கள் வியாபாரியை கட்டி வைத்து அடித்தனர் .
சென்னை மாவட்டத்திலுள்ள பட்டரவாக்கம் ரயில்வே நிலையம் அருகில் ஒரு வாலிபர் பானி பூரியை விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் பானிபூரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் உருளைக்கிழங்கு வைத்திருந்த பாத்திரத்தை பொதுமக்கள் திறந்து பார்த்தனர். அப்போது உருளைக்கிழங்கில் பெரும்பாலான புழுக்கள் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அந்தப் வியாபாரியை ஒரு கம்பியில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வியாபாரியை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.