உக்ரைன் ரஷ்யா இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் இன்று நடைபெறுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் ஒருபுறமிருக்க மற்றொரு புறம் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த வகையில் துருக்கியில் இன்று இரு நாடுகளுக்கு இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடங்கி நாளை மறுதினம் முடிகிறது.
இந்த செய்தியை உக்ரைன் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிற டேவிட் அராகாமியா இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் மிகவும் கடினமானவை என்று தெரிவித்திருந்த நிலையில் துருக்கியில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையிலாவது ஏதேனும் திருப்பம் வருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.