Categories
உலக செய்திகள்

“இதனால் எங்களுக்கு பெருமை எதுவும் இல்லை”- டுவிட்டர் தலைவர் வருத்தம்..!!

அதிபர் டிரம்ப் கணக்கை தடை விதித்தது எங்களுக்கு எந்த பெருமையும் இல்லை என்று ட்விட்டர் நிறுவன தலைவர் ஜாக் டோர்ஸி கூறியுள்ளார்.

வன்முறையை தூண்டும் வகையில் டுவிட்டரில் கருத்துகளை வெளியிடுவதாக அமெரிக்க அதிபரின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் தடைசெய்தது. இது பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் நிறுவன தலைவர் அதிபர் கணக்கை தடை செய்ததில் பெருமைப்பட எதுவுமில்லை. ஆனால் அது ஒரு சரியான முடிவு. ஆரோக்கியமான உரையாடல் நடப்பதற்கு வழி செய்யாத வகையில் இது ஒரு டுவிட்டரின் தோல்வியே’ என்று அவர் கூறியுள்ளார்.

அனைத்து விதமான எச்சரிக்கைகளும் எடுத்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும், அச்சுறுத்தல் குறித்து தகவல்களை உறுதி செய்த பிறகு எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். டுவிட்டரின் நடவடிக்கை, கருத்து சுதந்திரத்துக்கு ஏற்பட்ட பாதிப்பா என்று புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

Categories

Tech |