இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவைத் துண்டிப்பதாக வடகொரியா அறிவித்ததற்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் முன் சோல் மியோங் என்பவர் 10 ஆண்டுகள் மேலாக வசித்துவருகிறார். இவர் வடகொரியா நாட்டை சேர்ந்தவர். அவரின் மீது அமெரிக்கா பண மோசடியில் வழக்குப்பதிவு செய்துள்ளது. அதனால் அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று மலேசிய அரசுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது . அந்த கோரிக்கையை ஏற்ற மலேசிய அரசு அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது.
இதை பற்றி அறிந்த வடகொரியா, மலேசியா உடனான தங்கள் தூதரக உறவை முழுமையாகத் துண்டிப்பதாக நேற்று தெரிவித்துள்ளது. அதனால் வடகொரியா மலேசியா மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உடனே கடும் கோபமடைந்த மலேசிய வெளியுறவு அமைச்சகம் வடகொரியாவின் இந்த நடவடிக்கை நட்பற்றது மற்றும் கட்டமைக்க முடியாதது. மேலும் மலேசியாவில் உள்ள வடகொரியா தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.