Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிசூடு…. ஜனநாயகத்தின் மீது விழுந்த ஒரு வடு…. சென்னை உயர்நீதிமன்றம்….!!!!

தூத்துக்குடியில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.  இது தொடர்பான வழக்கை  விசாரித்த மனித உரிமை ஆணையம் இந்த வழக்கினை முடித்து வைத்தது.  ஆனால், ஒரு சில சமூக ஆர்வலர்கள் அந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்.  அதில் மனித உரிமை ஆணையம் மறுபடியும் வழக்கை எடுத்து நடத்த வேண்டும் எனவும், அவர்கள் நடத்தும் விசாரணை முறையானதாக கிடைக்கிறதா என்பதையும் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் கோரிக்கையை முன்வைத்தனர் .                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  இந்த நிலையில் சென்னை ஹைகோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  அதன் பிறகு உய்ரநீதிமன்றதில்  மனித உரிமை ஆணையம் இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது.  மேலும் நீதிபதிகள் இந்த அறிக்கையை மத்திய அரசு ,மாநில அரசு மற்றும் மனுதாரருக்கு நகல் ஆய்வு மூலம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர் .  அதன் பின்னர் இணைய வழி மூலமாக நகலாய்வை  பகிரக் கூடாது என்றும் அவர்கள் அறிவுரை வழங்கினர் .                                                                                                                                                                                                                                                                                                                                        மேலும், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக இப்படிப்பட்ட துப்பாக்கிச்சூடு போன்ற நிகழ்வுகள் அரசுத்துறைகள் செயல்படுத்தக் கூடாது. அதன் பின்னர் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும், இழப்பீடுகள் கூடுதலாக வழங்குவதற்கு தமிழக அரசு பரிசீலனைசெய்ய  வேண்டும்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 6 வாரங்களுக்கு இவ்வழக்கை ஒத்திவைத்தனர்.  மேலும் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த ஒரு வடு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |