துவரை மொச்சை கிரேவி
தேவையான பொருட்கள் :
உரித்த துவரைக்காய் – 1 கப்
தோல் உரித்த மொச்சை - 1 கப்
தக்காளி – 4
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2
கடுகு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் துவரை, மொச்சை இரண்டையும் உப்பு சேர்த்து, வேகவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து, வேக வைத்த மொச்சை – துவரையுடன் சேர்க்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு ,கறிவேப்பிலை மற்றும் துவரை, மொச்சை கலவையை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் துவரை மொச்சை கிரேவி தயார் !!!