எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு படத்தின் ‘காசேதான் கடவுளடா’ என்ற 2ஆவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “துணிவு”. இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்று உள்ளது. இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
அண்மையில் துணிவு படத்திலிருந்து ‘சில்லா சில்லா’ என்ற முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஜிப்ரான் இசையில் அனிரூத் பாடி இருந்த இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து துணிவு திரைப்படத்தின் “காசேதான் கடவுளடா” என்ற பாடல் இன்று (18ஆம் தேதி) மதியம் 2 மணியளவில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது..
இந்நிலையில் துணிவு படத்தில் ‘காசேதான் கடவுளடா’ என்று தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் 2ஆவது பாடலை வெளியிட்டுள்ளார். ஜிப்ரான் இசையில் நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் பாடியுள்ள காசேதான் கடவுளடா பாடல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Get ready to experience the power of Money !💸 #KasethanKadavulada OUT NOW
Go watch it now – https://t.co/N1cHVVQcvP #ThuvinuSecondSingle
— Boney Kapoor (@BoneyKapoor) December 18, 2022