Categories
மாநில செய்திகள்

“ரூ. 510-க்கு டிக்கெட்”…. அரசு பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் பிடிஆர்…. நெகிழ்ச்சியில் மதுரை மக்கள்….!!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள எல்லீஸ் நகர் மற்றும் தத்தனேரி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நீண்ட நாட்களாக புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த மக்களின் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நேற்று புதிதாக அவ்வழித்தடத்தில் 2 பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த பேருந்துகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு அரசு பேருந்தில் பொதுமக்களுடன் சேர்ந்து அமைச்சர் பிடிஆர் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த 50 நிர்வாகிகளும் பயணம் செய்தனர். அப்போது நடத்துனரிடம் 510‌‌ ரூபாய் கொடுத்து அமைச்சர் பிடிஆர் டிக்கெட் பெற்றுக் கொண்டார். மேலும் அமைச்சராக இருந்து கொண்டு அரசு பேருந்தில் பொதுமக்களுடன் பயணம் செய்தது மட்டுமின்றி டிக்கெட்டும் பெற்றுக் கொண்டது பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, நிதி அமைச்சரை வெகுவாக அனைவரும் பாராட்டினர்.

Categories

Tech |