Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK – அணியின் 2வது போட்டி….. சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை களைகட்டியது..!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள  2 வது போட்டிக்காக டிக்கெட் விற்பனை இன்று காலை 8:45 மணிக்கு தொடங்கியது. 

ஐ.பி.எல் கிரிக்கெட்  திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி மே மாதம் வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் உள்ளன.ஒவ்வொரு அணியும் ஒரு அணியுடன் தலா இரண்டு முறை  உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். அதில் வெல்லும் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறும்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை  அணி பெங்களூரு அணியை எளிதில் வென்றது. இந்நிலையில் இன்று 2ஆவது போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில்  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாட உள்ளது.வரும் 31ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை அணி விளையாட உள்ளது.

Image result for டிக்கெட் விற்பனை

இந்நிலையில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை காலை 8:45 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் விற்பனை நேரடியான கவுண்டர் முறை மற்றும் ஆன்லைன் முறையிலும் இன்று காலை விற்பனை தொடங்கியுள்ளது. இப்போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை 1300 ஆக விற்பனை செய்யப்படுகிறது.. சென்னை அணியின் விளையாட்டை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில்  அதிகாலை முதலே ரசிகர்கள் காத்திருந்து  டிக்கெட் வாங்கி செல்கின்றனர்.

Categories

Tech |