பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.
இறுதி நாட்களை நெருங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சிவானி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் ரகசிய அறை வழியே அன்பு அணியைச் சேர்ந்த அர்ச்சனா, ரமேஷ் ,நிஷா மற்றும் இவர்களுடன் ரேகாவும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகின்றனர். இவர்களைப் பார்த்த மற்ற போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றனர்.
#Day99 #Promo3 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/NGZLFR6w2x
— Vijay Television (@vijaytelevision) January 11, 2021
இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் போட்டியாளர்கள் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போடுகின்றனர். தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் ‘இந்த ஒரு வாரம் சரியாக இருந்து டிக்கெட்டு ஃபினாலே போகணுமா ? அல்லது 91 நாட்கள் சரியாக இருந்ததால் பைனல் போகணுமா ?’என்ற கேள்வி இருப்பதாக ஆரி அனைவரின் முன் கூறுகிறார். இதையடுத்து பேசிய பாலா 11 போட்டியாளர்களும் தனக்கு எதிராக வாதாடும் போது சந்தோஷமாக இருந் ததாக அனைவரின் முன் கூறுகிறார்.