லண்டனில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ரயில்வே ஊழியரை தாக்கிய நபரை பற்றிய சிசிடிவி புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
லண்டனில் உள்ள wembely ரயில் நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை கண்டித்த ரயில்வே ஊழியரை கடுமையாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். அதன்பின்னர் அவர் ரயில் நிலையத்திலிருந்து வெளியே சென்றுவிட்டார். இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் எட்டாம் தேதி பகல் 11.50 மணிக்கு நடந்திருக்கிறது. இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், சம்பவத்தில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
மேலும் அந்த நபரிடம் சம்பவம் பற்றி விசாரணை நடத்த இருப்பதால், ரயில்வே ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், அதில் தொடர்புடைய நபரை பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தாலும் காவல்துறையினரிடம் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளனர்.