Categories
உலக செய்திகள்

டிக்டாக் செயலி மீண்டும் பயன்படுத்தலாம்…. நீதிமன்றம் அதிரடி…. குஷியில் அமெரிக்க மக்கள்…!!

அமெரிக்காவில் டிக்டாக் செயலியின் தடை விதிப்பிற்கு பெடரல் நீதிமன்றம் மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ள்ளது.

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதையடுத்து அமெரிக்க மற்றும் சீனாவிற்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சீனாவின் தயாரிப்புகள் அனைத்திற்கும் அமெரிக்க அரசு தடை விதித்தது. எனவே சீனாவை சேர்ந்த டிக் டாக் மற்றும் தகவல் பகிர்வு செயலிகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்க அமெரிக்க வர்த்தக அமைச்சகம் முடிவு செய்தது. மேலும் சீனாவின் செயலிகளை பயன்படுத்த அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னிச்சையாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனம் ஒன்று வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் டிக்டாக் செயலிக்கு தடையை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் விதித்த தடைக்கு பெடரல் நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும் இந்த முடிவை ட்ரம்ப் தன்னிச்சையாக எடுத்ததாக ட்ரம்ப் மீது நீதிபதி விமர்சனம் செய்துள்ளார். இதையடுத்து டிக்டாக் செயலியை விரைவில் கொண்டுவரப்படும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் கடும் குஷியில் உள்ளனர்.

Categories

Tech |