Categories
தேசிய செய்திகள்

தேசிய விலங்கு என்பது சரிதான்….. உலகிலையே 70% இங்கே தான்…. சுற்றுசூழல் துறை அமைச்சர் தகவல்…!!

இந்தியாவின் தேசிய விலங்கான புலிகள் இனம் உலகிலேயே 70 சதவிகிதம் இங்குதான் உயிர் வாழ்கிறது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 29 ஆம் தேதியான நாளை உலக புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடைப்பிடிக்கப்படுவதற்கான காரணம் புலியானது அழிந்து வரும் விலங்கின் பட்டியலில் இருக்கிறது. அதனை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும்,புலிகளால் மனிதனுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள், அவை இருப்பதால் இயற்கைக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து புரியும் விதமாக எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஜூலை 29 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் உலக புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் உலகத்தில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டும் 70 சதவிகிதம் புலிகள் இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் 30 ஆயிரம் யானைகள், 500க்கும் மேற்பட்ட சிங்கங்கள் உயிர் வாழ்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேபோல் நாளை உலக புலிகள் தினம் இந்த தினத்தில் புலிகளை பராமரிப்பது பாதுகாப்பது மட்டுமின்றி பிற வனவிலங்குகளையும் அழியாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்ற விழிப்புணர்வை இளைஞர்கள் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஒரு யானை நினைத்தால் அதன் சாணத்தின் மூலம் ஒரு காட்டையே உருவாக்கும். மனிதர்களைத் தாண்டி விலங்குகளால் தான் இயற்கை தற்போது வரை சமநிலையில் இருக்கிறது. மனிதன் இயற்கையை அழித்துக் கொண்டே வருகிறான். விலங்குகள் மட்டுமே இயற்கையை பாதுகாக்க கூடியவைகளாக இருக்கும் எனவே விலங்குகளை பாதுகாத்து இயற்கையையும் பாதுகாப்போம்.

Categories

Tech |