புலி ஒன்று யானையை கண்களில் நெருப்போடு தாக்க இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம் குடகுமலை பகுதியில் உள்ள நாகர்கோல் என்று பகுதியில் யானை ஒன்று நிற்கும்போது அந்த யானையை புலி ஒன்று தாக்க இருந்துள்ளது விடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவை ஆனந்த மஹிந்திரா தனது சகோதரிக்கு அனுப்பியுள்ளார். அவருடைய சகோதரி இதை தெரிந்த வேறு ஒருவருக்கு அனுப்பியுள்ளார். மேலும் இந்த வீடியோவில் வில்லியம்ஸ் என்ற ஒரு பிரபல எழுத்தாளர் எழுதிய பாடலொன்றை குறிப்பிட்ட அவர், அந்த பாடல் தற்போது உண்மையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த பாடலில் அவர் குறிப்பிட்டுள்ள வரி “புலியின் கண்களில் நெருப்பு எரிகிறது” என்று கவிதை நடையில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப குறிப்பிட்ட இந்த வீடியோவில் புலியின் கண்கள் பார்க்கவே பயங்கரமாக நெருப்பு போல காட்சியளிக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/i/status/1340157903416659968