சீன அரசு, விலங்கியல் பூங்காவில் இருக்கும் புலிகளை பார்த்தவாறு தூங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட விடுதியை அடைப்பதற்கு உத்தரவிடப்படுகிறது.
சீனாவில் இருக்கும் நான்டோங் என்ற பகுதியில் இருக்கும் மிகப்பெரிய விலங்கியல் பூங்காவில் 20,000 வனவிலங்குகள் இருக்கிறது. இதற்கு இடையில் சென்டி ட்ரைட் ட்ரீஹவுஸ் என்ற ஓட்டல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓட்டலில், வெள்ளை புலிகளை பார்த்தவாறு படுத்துத் தூங்கக்கூடிய வகையில் வசதிகள் செய்து தரப்பட்டிருக்கிறது.
இதற்கென்று சிறப்பாக கண்ணாடி அறைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இவ்வாறான விடுதி, மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பாதுகாப்பு கிடையாது என்று அந்நாட்டு அரசாங்கம் அதனை அடைப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறது.