சென்னையில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படுமா ? என்ற கேள்விக்கு அமைச்சர் RB.உதயகுமார் பதிலளித்துள்ளார்.
சென்னையில் கொரோனவை கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கின்றது. இதனால் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படுமா ? என்ற கேள்விக்கு முதலமைச்சர் அமைச்சரவை கூட்டம் போட்டு இருக்காங்க. அதுல முதலமைச்சரே அறிவிப்பார்கள். சென்னையில் இருந்து குடும்பம் குடும்பமாக வெளியே போய்கிட்டு இருகாங்க என்ற கேள்விக்கு 85 லட்சம் பேர் இருக்கின்றார்கள். ஜனநாயக நாட்டில் யாரையும் போக கூடாதுன்னு சொல்ல முடியாது. ஒண்ணு ரெண்டு பேர் போய் கிட்டு இருப்பதாக செய்திகள் இருக்கிறது.
தொழிலில் பார்ப்பதற்காக, வேலை பார்ப்பதற்காக வந்திருக்கலாம். வேலை முடிந்தபின் அவங்க வீட்டுக்கு போகணும். அதுக்கு நாம என்ன காரணம் கற்பிப்பது என்று தெரியவில்லை. நீங்க ஒரு காரணம் சொல்றீங்க, கட்டட வேலைக்கு வராங்க, கட்டட வேலை முடிஞ்சதும் அடுத்த வேலை கிடைக்கலைனா ஊருக்கு போய்டு வாங்க….. திரும்ப கூப்பிட தான் வருவாங்க தொழிலாளர்கள்.
மக்களுக்கு எந்த செய்தியுமே நீங்க கொடுக்கும் போது நம்பிக்கை ஊட்டக்கூடிய செய்தியாக, பாதுகாப்பு ஏற்படுத்துகிற செய்தியாக, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற செய்தியாக இருக்க வேண்டுமே தவிர, அது அச்சுறுத்தலாக இருப்பதாக இருந்தால் கவலை அளிப்பதாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் RB.உதயகுமார் கூறினார்.