ஸ்னாப்ஷாட் செயலியல் டிக்டாக்கின் அம்சம் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
பிரபலமான டிக் டாக் வீடியோ அப்ளிகேஷன் வசதியை நகல் செய்து ஸ்னாப்ஷாட் அப்ளிகேஷன் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதன்படி டிஸ்கவர் பக்கத்திணை நகல் எடுத்து வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக் டாக் அப்ளிகேஷனை பயன்படுத்தும் அனுபவம் பயனாளர்களுக்கு இதில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மேலும் மாற்றம் தொடர்பான அறிவித்தல் உட்பட மாதிரி படங்களும் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட உள்ளது. டிக் டாக் அப்ளிகேஷன் பயனாளர்களுக்கு இந்த வசதி வெகுவாக கவர்ந்துள்ளது. இருப்பினும் ஸ்னாப்ஷாட் அப்ளிகேஷனில் இந்த வசதி வரவேற்பினை பெறுமா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.