Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி…. வெளியான 2 காரணங்கள்…. எது உண்மை…?

டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜி.பி.முத்து டிக் டாக் செயலியில் காணொளி வெளியிட்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட ஜி.பி.முத்து குடும்ப பிரச்சனையினால் சமூக வலைதளங்களில் தன்னால் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்று அதில் தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஜி.பி.முத்து திடீரென தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதலில் குடும்ப பிரச்சனையினால் அவர் தற்கொலை முயற்சி செய்ததாக தெரிய வந்தது. ஆனால் தற்போது தீராத வயிற்று வலியினால் தற்கொலை முயற்சி செய்துள்ளார் என கூறப்படுகின்றது. இரண்டு காரணங்களில் எது உண்மை என்பது தெரியாமல் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |