இந்தியாவின் டிக் டாக் நிறுவனம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட தயார் என மத்திய அரசிடம் முறையிட்டுள்ளது
இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எல்லையில் கடந்தமாதம் மோதல் ஏற்பட்டதை அடுத்து, சீன பொருட்களை வாங்க மறுப்போம், சீன செயலிகளை உபயோகிக்க வேண்டாம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். அதன்படி, ப்ளே ஸ்டோரில் இருக்கக்கூடிய 59 செயலிகள் இந்தியர்களின் தகவல்களை திருட கூடியதாக இருப்பதாக கூறி, அதனை தடை செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, ஹலோ, டிக் டாக், யூசி ப்ரவுசர்,யூகம் உள்ளிட்ட 59 செயலிகளை மத்திய அரசு நேற்று தடை செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து டிக் டாக் நிறுவனம் இதுகுறித்து மத்திய அரசிடம் முறையிட்டு உள்ளது. அதில், இந்தியர்களின் தகவல்களை சீனா உட்பட எந்த ஒரு வெளி நாட்டு அரசுக்கும் நாங்கள் வழங்க மாட்டோம். அரசின் கட்டுப்பாட்டுக்கு இணங்கி செயல்பட தயார் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதே போன்று ஒரு முறை டிக்டாக் நிறுவனம் இந்தியாவில் தடை செய்யப்பட்டு பின் இங்கே உள்ள சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்போம் என உறுதி அளித்த பின் மீண்டும் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.