சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த தனம் உட்பட 10க்கும் மேற்பட்ட பெண்கள் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தனம், தனது பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பு படித்து வந்தபோது சமூகவலைதளங்களில் ரவுடி பேபி சூரிய ஆபாசமாக பேசும் வீடியோ அடிக்கடி வந்தது. அதனால் ரவுடி பேபி சூர்யாவை தொடர்பு கொண்டு பேசியபோது தன்னை ஆபாசமாக பேசினார். அதுமட்டுமல்லாமல் தனது நம்பரை சமூக வலைத்தளங்களில் விபச்சாரி என கூறி பதிவு செய்துள்ளார்.
மேலும் கஷ்டத்தில் சிக்கியுள்ள பெண்களை குறிவைத்து அதிக பணம் தருவதாக கூறி சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலியல் தொழிலுக்கு அனுப்பி வைக்கிறார். என்னை பற்றி யாரிடம் சொன்னாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார். பல அமைச்சர்களின் பின்புலம் அவருக்கு உள்ளது. இவர் மீது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரவுடி பேபி சூர்யா குறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. உடனே ரவுடிபேபி சூர்யாவை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் கூறினார்.
அந்தப் புகார் மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசாருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த தனம், ரவுடி பேபி சூர்யாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார். ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யக்கோரி அவரால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் முன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சூர்யா மீது புகார்கள் வந்தாலும் போலீஸ் விசாரிக்காதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.