டிக் டாக் பிரபலமான ஜி.பி முத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவர் சன்னி லியோனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். அடுத்து அஜித் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் டிக் டாக் ரவுடி பேபி சூர்யாவை சுத்தமாக பிடிக்காது என்று ஜிபி முத்து ஆவேசமாக பேசியுள்ளார்.
ஒரு காலத்தில் நட்புறவில் இருந்த இருவரும் திடீரென பிரிந்தனர். இது குறித்த முதல் முறையாக ஜிபி முத்து பேசியுள்ளார். அப்போது அவர் , சூர்யா என்னுடைய மனைவியின் மாற்றுத்திறனை பற்றி பேசினார். நான் என் மனைவியை விரும்பி தான் கல்யாணம் செய்தேன்.என் மனைவியைப் பற்றி தவறாக பேசும் யாரும் எனக்கு தேவையில்லை என ஜிபி முத்து கூறியுள்ளார்.