மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு TIKTOK செயலி நிர்வாகம் உடனடி பதிலை அனுப்பி உள்ளது.
இந்தியாவில் மிக வேகமாக பிரபலமான செயலிகளில் ஒன்றாக TIKTOK இருக்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் TIKTOK செயலி தடை செய்யப்பட்டு பின் கடும் நிபந்தனைகளுடன் தடை நீக்கப்பட்டது. இதன்பின் TIKTOK பயனாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாகி உள்ளது. இந்நிலையில் TIKTOK குறித்த புகார்களை அடுத்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சைபர் சட்டம் மற்றும் பாதுகாப்புத் துறை,
TIKTOK மற்றும் ஹலோ பைட்டன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு பதில் அளிக்க கோரி 24 கேள்விகள் அடங்கிய அறிக்கையை அனுப்பி உள்ளது. இந்நிலையில் இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக TIKTOK நிர்வாகம் தனது பதிலை தெரிவித்துள்ளது. மேலும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளது. ஜூலை 22ல் பதிலளிக்க உத்தரவிட்ட நிலையில் TIKTOK மற்றும் ஹலோ நிறுவனங்கள் உடனடியாக பதில் அளித்துள்ளனர்.