விமானத்தின் நிலையைக் குறித்து அறிவதற்கான வழிமுறையை டிக்டாக் பிரபலம் வெளியிட்டுள்ளார்.
நமது உறவினர் அல்லது நண்பரையோ வெளிநாடு அனுப்ப வேண்டுமெனில் விமானம் வரை சென்று வழியனுப்பி விட்டு திரும்பி விடுவோம். அதன் பின்பு விமானம் எங்கு சென்று கொண்டிருக்கிறது. எவ்வழியில் செல்கிறது என்பதை நாம் ஒரு போதும் சிந்திக்க மாட்டோம். ஆனால் இதை ஐபோனில் ஒரு எளிய வழி முறையின் மூலம் அறிய முடியுமாம்.
அதனை மிகவும் எளிமையாகவே கண்டறியலாம். அதிலும் உங்கள் உறவினரோ அல்லது நண்பரோ எவரேனும் விமானத்தில் வெளிநாடு சென்றிருந்தால் அதனைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியும். இந்த தகவலை டிக்டாக் பிரபலமான MaxMilespoints என்பவர் வெளியிட்டுள்ளார்.
அதாவது, நமது ஐபோனில் உள்ள ஐமெசேஜில் விமானத்தின் எண் சான்றாக BA392 என்பதை அதில் குறிப்பிட்டு நீங்கள் tabஐ தட்டினால் அது எங்கே பறந்து கொண்டிருக்கிறது, தரையிறங்க எவ்வளவு நேரம் ஆகும், எவ்வழியாக செல்கிறது போன்ற என்று பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
இந்த செய்தியை அறிந்த மற்ற பயணிகள் ‘இத்தனை நாட்கள் இது தெரியாமல் போய்விட்டதே’ என்று வியப்பில் உள்ளனர். மேலும் இதனை பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று சோதனை செய்தது. அதில், பிரிட்டிஷ் ஏர்வேஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், ஏர் கனடா, டெல்டா, எஸ்ஏஎஸ் ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ், லுஃப்தான்சா, ஏர் பிரான்ஸ் மற்றும் கேஎல்எம் போன்ற பல விமானங்களின் நிலையை கண்டறிய முடிந்தது.
இருப்பினும் விர்ஜின் அட்லாண்டிக், ரயானேர், ஈஸிஜெட் மற்றும் விஸ் ஏர் ஆகிய விமானங்களில் இது செயல்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவலானது மிகவும் பயனுள்ளதாகவும் நமக்கு வேண்டியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இருக்கும் என்று அனைவரும் தெரிவித்துள்ளனர்.