Categories
உலக செய்திகள்

‘இங்கு எலும்புகள் விற்கப்படும்’…. டிக்டாக்கில் பதிவேற்றிய இளைஞர்…. வெளிவந்துள்ள சுவாரஸ்யமான தகவல்….!!

டிக்டாக் செயலியில் மனித எலும்புகளை வரிசையாக வைத்து இளைஞர் ஒருவர் காணொளி பதிவேற்றியுள்ளார்.

உலகில்  சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆடுதல், பாடுதல் போன்ற தமது திறமைகளை டிக்டாக்கில் பதிவேற்றி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 21 வயதான ஜான் பிச்சாயா பெர்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் டிக்டாக் செயலியில் மனித எலும்புகளை வைத்து காணொளியாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் மனித எலும்புகளை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  அவர் வீட்டிலேயே மனிதனின் மண்டை ஓடு, கை, கால் மற்றும் குழந்தைகளின் எலும்புகள் போன்றவற்றை வரிசையாக அடுக்கி வைத்து விற்பனை செய்வது போன்று டிக்டாக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிலும் ஒவ்வொரு எலும்பையும் காட்டி அதுக்குறித்த அறிவியல் பூர்வமான தகவலையும் கூருகிறார். இதனை அடுத்து அதன் விலையையும் குறிப்பிடுகிறார். இதுவரை ஐந்து லட்சம் பேர் இவரை பின்தொடர்கிறார்களாம்.இருப்பினும் சிலர் சமூக வலைதளங்களில் இது போன்று செய்வது நியாயமா என்று கேள்வியும் எழுப்புகின்றனர்.

People Have Questions About This TikToker's Skull Collection

இதற்கு அவர் விளக்கம் அளித்ததில் “பெரும்பாலும் மருத்துவர்கள் மற்றும் எலும்பியல் நிபுணர்களே அதிக அளவு வருகின்றனர். அவர்கள் தங்களது மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காகவே  எலும்புகளை வாங்கி செல்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |