Categories
அரசியல்

14….. 28….. ஒன்னு கூட இருக்க கூடாது….. காலகெடு நிர்ணயித்த அரசு…..!!

கொரோனா பாதிப்பில்லாமல் இருக்கும் பகுதிகளை  அறிவிக்கும் வழிவகைகளை தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது.

தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை தமிழக அரசு சிகப்பு , ஆரஞ்சு, பச்சை உள்ளிட்ட நிறங்களை வைத்து மண்டலங்களாக பிரித்து வைத்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து பாதிப்பில்லாமல் இருக்கும் பகுதிகளை அறிவிக்கும் வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி அடுத்த 14 நாட்களில் புதியதொரு வைரஸ் தொற்று உறுதியாகவில்லை என்றால் சிவப்பு மண்டலங்களை ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கலாம் எனவும், ஆரஞ்சு மண்டலத்தில் 28 நாட்களில் பாதிப்பு ஏதும் இல்லாமல் காணப்பட்டால் அதை பச்சை மண்டலமாக அறிவிக்கலாம் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசு கொடுத்த கேடு நாட்களுக்குள் நோய் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் மண்டலங்கள் அதற்கேற்றவாறு அறிவிக்கப்படும். உதாரணமாக ஆரஞ்சு மண்டலத்தில் 28 நாட்களுக்குள் நோய் தொற்று தொடர்ந்து உறுதி செய்யப்பட்டால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படும். 

Categories

Tech |