தமிழகம் முழுவது ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது .
கொரோனா தொற்று காரணமாக மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இலிருந்து ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது தங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருப்பதாக தொடர்ந்து பல மாவட்டங்களிலிருந்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனையை வெளிப்படுத்தி வந்தனர் . இந்த நிலையில் தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் நாளை முதல் ஆட்டோ இயக்கலாம் என அரசு அனுமதி அளித்திருக்கிறது, முதலமைச்சர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னை நீங்கலாக அனைத்து பகுதிகளிலும் ஆட்டோக்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 மணிநேரம் வரை இயங்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆட்டோக்களில் ஒரு நபர்களை ஏற்றுவதற்கான அனுமதி இருக்கிறது. அதே போல அவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பயணி சென்ற பிறகு சுத்தம் செய்ய வேண்டும். அவர்களுக்கு கிருமிநாசினி கொண்டு கையை சுத்தம் படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.