Categories
அரசியல் மாநில செய்திகள்

நேரம் வந்தாச்சு….. என்ன சொல்ல போகிறார்…..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

அரசியல் பயணம் தொடர்பான கேள்விக்கு இன்னும் சற்று நேரத்தில் ரஜினிகாந்த்  பதில் அளிக்க உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாகவே தான் அரசியலுக்கு வரப்போவதாக அவ்வப்போது செய்தியாளர்களையும்,  மக்களையும் சந்தித்து பேசி வந்தார். இந்நிலையில் அவர் எந்த வருடம் அரசியலுக்கு வரப்போகிறார், வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து  எழுந்த வண்ணம் இருந்தது. அந்த வகையில்,

சில நாட்களுக்கு முன்பாக கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து முக்கிய கூட்டம் நடத்தினார் ரஜினி. தற்போது இவர் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து உரிய பதில் அளிக்க நடிகர் ரஜினிகாந்த் அவர்களே செய்தியாளர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இன்னும் சில நிமிடங்களில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.  இது குறித்த தகவல்களும், ஹஷ்டேக்குகளும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Categories

Tech |