Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணத்தை செலுத்த மே 6ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு – மின்சார வாரியம்!

ஊரடங்கு ஏப்., 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி 1173 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக நாளையுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை ஏப்.,30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 25 முதல் ஏப்., 30 வரை செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை மே 6ம் தேதிக்குள் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய மாத கணக்கீட்டின்படி மின்கட்டணத்தை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை இணைய வழியாக செலுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்தாதவர்கள் http://tangedco.gov.in என்ற இணையத்தளம் அல்லது tneb app மூலம் மின்நுகர்வோர்கள் கட்டணம் செலுத்தலாம் என மின்வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |