நெல்லை திருநெல்வேலி மாவட்டம் உசிலம்பட்டியில் வசிப்பவர் பாலகிருஷ்ணன். இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி படித்து கொண்டிருந்த போது வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு இருவரும் ஒருவருடமாக காதளித்து வந்துள்ளனர். இதையடுத்து கொரோனா வைரஸ் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் இருவரும் நேரில் சந்திக்காமல் இருந்ததால் தொடர்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய காதலியை பார்க்க முடியாத விரக்தியில் பாலகிருஷ்ணன் தன்னுடைய காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது பெண்ணின் பெற்றோர் பாலகிருஷ்ணணை எச்சரித்து அனுப்பியுள்ளனர். மேலும் அந்த பெண்ணும் வேறொருவரை தற்போது காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பாலகிருஷ்ணன் தன்னுடைய காதலியை தேடி அவரது வீட்டுக்கு சென்று உள்ளார். பின்னர் அவர் கல்லூரிக்கு சென்ற தகவல் கிடைத்ததால் நேராக கல்லூரிக்கு சென்று அவருடன் பேச முயன்றபோது கோபமடைந்த பாலகிருஷ்ணன் தன் கையில் வைத்திருந்த பிளேடால் காதலி கழுத்தை மறுத்துள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த அந்த பெண் வாலியால் கதறி அழுதுள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனையில் கொண்டு அனுமதித்துள்ளன.ர் இதையடுத்து காவல்துறையினர் பழகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காதலியை கழுத்தை அறுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.