செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வரியை அபராதம் இன்றி செலுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் கால அவகாசம் அளித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தான் ஒரு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அரசு அலுவலகங்களும், தொழில் நிறுவனங்களும் சீராக இயங்க தொடங்கிவிட்டன. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் சொத்துவரி, தொழில்வரி, தொழில் உரிமம் புதுப்பித்தலுக்கு செலுத்த வேண்டிய தொகைக்கு அபராதம் இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். மேலும் எந்தவித அபராதமும் தண்டதொகையுமின்றி செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வரியை செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.