ராமநாதபுரம் மாவட்டத்தில் அலுவலக பணியாளர் ஓய்வு பெற வேண்டிய சமயத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மூலக்கொத்தளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உரிமையாளர்கள் நலசங்க மெட்ரிக் பள்ளியின் நிதி மோசடி வழக்கில் போலீசார் 6 பேரை கைது விசாரணை செய்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை பிரிவு அலுவலர் உதவியாளராக தசரதராமன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த வழக்கில் 7-வதாக தசரதராமம் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் கடந்த 23ஆம் தேதி கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கடந்த 30ஆம் தேதி தசரதராமன் ஓய்வு பெற இருந்த நிலையில் இவர் கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.