புதுச்சேரியில் வரும் 23ம் தேதி முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் நாராயணசாமி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், பெட்ரோல் பங்குகள் மாலை 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை சாலை 10 நாட்களுக்கு மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓட்டல்களில் மதியம் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மதுக்கடைகள் பகல் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார். வெளியில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா சோதனை செய்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். சென்னை, கடலூர், விழுப்புரம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் தான் புதுவையில் கொரோனா பரவியது என தெரிவித்துள்ளார்.