Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சரியான நேரத்தில்…. செம்மையான அறிவிப்பு… முதல்வருக்கு குவியும் பாராட்டு …!!

ஊரடங்கு காலகட்டத்தில் தமிழக முதல்வர் பிறப்பித்த உத்தரவு அனைவரையும் கவர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றின் வீரியம் மிக கடுமையாக இருக்கின்றது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நாளை முதல் 12 நாட்களுக்கு சென்னை, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜுன் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து, ரூ.1000 பயனாளர்களின் வீட்டுக்கே சென்று வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து தமிழக முதல்வர் தற்போது ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்து சென்னை வாசிகளை கவர்ந்துள்ளார்.

12 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் செயல்படும் அம்மா உணவகத்தில் கட்டணமின்றி உணவு இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். அதே போல  ஊரடங்கு தீவிரப் படுத்தப் பட்டுள்ள நிலையில் இப்பகுதியிலுள்ள சமுதாயக் கூடங்கள் மேலும் வலுப்படுத்தி போதுமான அளவு உணவு சமையல் செய்து விலையில்லாமல் தேவைப்படும் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இந்த நடைமுறை என்பது நாளை முதல் 30ம் தேதி வரை அடுத்த 12 நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் என்று தற்போது தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது சென்னை வாசிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. பொருளாதார ரீதியாக மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலையில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு சரியான நேரத்தில், செம்மையான அறிவிப்பு என்று அனைவராலும் பாராட்டப்படுகின்றது.

Categories

Tech |