Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சரியான நேரத்தில்…. சரியான உத்தரவு…. மாஸ் காட்டிய தமிழக அரசு… கொண்டாடும் அரசு ஊழியர்கள் ..!!

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் காப்பீட்டில் கொரோனவுக்கான சிகிச்சையை சேர்க்கப்பட்டிருப்பதாக அரசாணை வெளியிடப்படுள்ளது.

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது மிக முக்கியமான ஒரு அம்சமாக பார்க்கப்படுகின்றது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் இருக்க கூடிய நிலையில், மருத்துவ காப்பீட்டு திட்டம் என்பது  அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவ காப்பீட்டில் ஒரு சில நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரக் கூடிய நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் தனியார் மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்ற ஒரு அரசாணையை அரசு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டு திட்டம் நீட்டிக்கப்படும், அந்த அடிப்படையில் இந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள காப்பீட்டு திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக் கூடிய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு  சிகிச்சை செலவு எவ்வளவு ? என்ற வந்த விஷயத்தையும் குறிப்பிட்டு தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்க்கு முதல் கட்டமாக 2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பல லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |