Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நேரக்கட்டுப்பாடு… காலை 7 முதல் மாலை 3 வரை தான் …!!

கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ராமநாதபுரத்தில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருவாரமாக ரமந்தபுரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்றைய தேதி வரைக்கும் 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.  இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் நலம் கருதியும், வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் நலன் கருதியும் நாளை முதல் காலை 7 மணி முதல் மாலை 3 மணிவரைக்கும் வர்த்தக நிறுவனங்கள் செயல்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

இந்த கட்டுப்பாட்டில்மருந்து கடைகள் ஹோட்டல்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் பார்சல் மட்டுமே கட்டிப் கொடுக்க அறிவுறுத்தி உள்ளார். முன்னதாக திருப்பூர் மாவட்டத்திலும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |