Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய டிப்பர் லாரி…. உடல் நசுங்கி பலியான சோகம்…. திருப்பூரில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் பனியன் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆட்டையம்பாளையம் பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போயம்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார்சைக்கிளில் சின்னத்துரை நெருப்பெரிச்சல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி சின்னத்துரை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சின்னத்துரை மீது லாரியின் முன்பக்க டயர் ஏறி இறங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சின்னதுரை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னத்துரையின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான மூர்த்தி என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |