Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திரும்ப வந்திருவான்னு நெனைச்சோம்…. ஆனா இப்படி நடந்துருச்சி ….சோகத்தில் மூழ்கிய குடும்பம் …!!!

வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள  பூண்டி நீர்த்தேக்கம் பகுதியில் சிறுவன் பிணம் ஒன்று மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள்  பென்னலூர் பேட்டை காவல்  நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும்  இறந்த  சிறுவன் யார் என்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த என்பவர் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி,  காமேஷ் என்ற மகனும்  உள்ளனர் .

இவரது மகன்  காமேஷ் ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுவன் காணாமல் போயுள்ளதாக தெரிகிறது. இதனால் சிறுவனை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டனர். அப்போது பூண்டி ஏரியில் சிறுவனின் உடல் மிதந்திருந்த செய்தியை கேட்ட  உறவினர்கள்  திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர். அவர்கள் சென்று பார்த்தபோது இறந்த சிறுவன் காமேஷ் தான் என்று உறவினர்கள் உறுதி செய்ததை போலீசார் தெரிவித்தனர். நீரில் மூழ்கி பலியான காமேஷ் நண்பர்களுடன் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள  சிற்றம்பாக்கம் பகுதியில் இருக்கும் கிருஷ்ணா கால்வாயில் குளித்தபோது வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |