Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய வாகனம்… விபத்தில் சிக்கிய சகோதரர்கள்… ஒருவர் பலி..!!!

வாகனம் மோதியதில் வாலிபர் ஒருவர் பலியானதை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது ஷேக். இவருடைய மகன் பெயர் சதாம் உசேன். இவரும் இவருடைய சகோதரர் சாகுல் அமீது என்பவரும் சம்பவம் நடந்த அன்று இரவு தங்கள் இருசக்கர வாகனத்தில் பழைய பேட்டை அருகில் உள்ள கண்டியபெரி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் இவர்கள் மீது மோதியது இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டார்கள்.

பலத்த காயமடைந்த சதாம் உசேன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சாகுல் அமீது பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |