காவல்துறையினர் வாகன சோதனை நடத்தியதில் மது விற்றவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதைதொடர்ந்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் வள்ளியூர் பூங்கா நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த தங்கபாண்டி என்பது தெரியவந்தது. மேலும் டாஸ்மார்க் கடையில் இருந்த மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.