Categories
ஆன்மிகம் இந்து

“திருநீறின் மகிமை”… அதப்பத்தி ஒரு குட்டி ஸ்டோரி… பார்ப்போமா..?

திருநீறு மகிமை பற்றிய ஒரு சிறிய கதையை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

புராண காலத்தில் ஒருநாள் துர்வாச முனிவர் தனது காலை வேலைகளை முடித்துவிட்டு, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு பூசி பித்ருலோகம் புறப்பட்டுக் கொண்டிருந்தார். மாபெரும் தவசீலர் எதிரில் கண்டவர்கள் மரியாதை நிமித்தமாக அவரை வணங்கி நகர்ந்தனர். துர்வாச முனிவர் செல்லும் வழியில் ஒரு கிணறு இருந்தது. அந்த கிணறை நான் பார்த்ததே இல்லையே என்ற சிந்தனையுடன் ஒரு கணம் கண்களை சுருக்கி எட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.

அந்த பெரிய கிணறு பக்கத்தில் ஒரு கிராமம் இயங்கிக் கொண்டிருந்தது. அதில் கடும் தீயும், அமில மழையும், பாம்பு ,தேள் போன்ற விஷ ஜந்துக்களும் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தன. பூலோகத்தில் பாவம் செய்தவர்கள் அங்க கடுமையாக தண்டிக்கப்பட்டு கொண்டிருந்தனர். சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர். துர்வாச முனிவர் குனிந்து அங்கே பார்த்து விட்டு நகர்ந்த மறுகணமே திடீரென்று அங்கு நிலைமை தலைகீழாக மாறியது. நகரமாக இருந்தது சொர்க்கமாக மாறியது.

பாம்புகளும் தேள்களும் மலர்மாலைகள் ஆகின. அமில மழையானது ஆனந்த மழையாகப் பொழிந்தது. இதமான தென்றலாக மாறியது. நகரம் முழுக்க நறுமணம் வீசியது. பாவ ஆத்மாக்கள் அனைவரும் ஆனந்தம் கொண்டனர். முகத்தில் பிரகாசம் வீசியது. அங்கு காவல் காத்துக் கொண்டிருந்த நபர்கள் இதனை கண்டு அஞ்சி எமனிடம் ஓடினர். திடீரென்று சொர்க்கமாக மாறிப் போன நகரத்தைப் பற்றி சொன்னேன் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த எமனும் இது எவ்வாறு சாத்தியம் ஆகியது, என்று நினைத்து இந்திரனிடம் ஓடினான். இந்திரனுக்கும் புரியவில்லை.

தேவேந்திரர்கள், தேவாதி தேவர்கள் அனைவரும் சர்வேஸ்வரன் இடம் ஓடினர். ஈசன் சிரித்துக்கொண்டே இந்த திருநீரை நடு விரல் , மோதிர விரல், ஆட்காட்டி விரல்களால் எடுத்து நெற்றி நிறைய மூன்று கோடுகளாக அணிய வேண்டும். மோதிர விரல் பிரம்மனையும், நடுவிரல் விஷ்ணுவையும், ஆட்காட்டி விரல் என்னையும் குறிக்கும். சாஸ்திரப்படி திருநீறு அணிந்த  துர்வாசரும் கிணற்றை குனிந்து பார்க்கும் போது அவரது நெற்றியில் இருந்த சிறு துளி திருநீறு உள்ளே விழுந்ததால் அது சொர்க்கமாக மாறிப் போனது.

இதுதான் அந்த  நரகம் சொர்க்கமானது காரணம் என்று ஈசன் கூறினார். சிறிதளவு நீரும் கூட பாவம் செய்தவர்கள் மீது பட்டால் புண்ணியம் செய்தவர்கள் ஆவார்கள். ஆகவே நாளும் திருமுறை போற்றி சிவ பெருமானை வணங்குவோம். நம் அனைவரையும் காப்பார் ஈசன்.

Categories

Tech |