Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விடாமல் வெளுத்து வாங்கும் மழை…. போக்குவரத்துக்கு வழி இல்லை…. மக்கள் அவதி….!!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் திருநெல்வேலி – திருச்செந்தூர் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையிலும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இரவு பகல் பாராது விட்டு விட்டு இம்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த ஏழு நாட்களாக சூரியனையே பார்க்க முடியாத வகையில் தொடர்ந்து மழை பெய்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் அணை பகுதிகளிலும் கனமழை கொட்டுகிறது. சாலைகள் எங்கும் தண்ணீர் ஆறுபோல் ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பயிர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் வாழை, நெல் பயிர்களும் மூழ்கியுள்ளன. வெள்ளம் வடிந்த பிறகே பயிர் சேதங்களின் முழு விவரம் தெரியவரும் என கூறப்படுகிறது. பருவம் தவறி பெய்த அடைமழை காரணமாக ஏராளமான நெற்பயிர்கள் மற்றும் வாழைகள் நாசமாகியுள்ள நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை நேற்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உதயகுமார், ராஜலட்சுமி, மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பெரும் பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டுள்ளது என அவர்கள் கூறினர்.

Categories

Tech |