Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திற்பரப்பு அருவியில்  நீர்வரத்து அதிகரிப்பு… குவியும் சுற்றுலா பயணிகள்..!!

கன்னியாகுமரி மாவட்டம்  திற்பரப்பு அருவியில்  நீர் ஆர்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால்  சீசன் களை கட்ட துவங்கியுள்ளது. இன்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் திற்பரப்பு அருவிக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

Image result for திற்பரப்பு

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவியில் ஆர்பரித்துக் கொட்டும் நீரில் நீராடி செல்கின்றனர். அதே போல் அங்குள்ள சிறுவர்கள்  பூங்கா, நீச்சல் குளம், படகு சவாரி உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக அலைமோதுவதால் வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |