Categories
தேசிய செய்திகள்

இந்த ஐடியா நல்ல இருக்கே… பாராட்டக்கூடிய நல்ல முயற்சி… இனிமேல் இப்படிதான்…!!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக பைகள் விற்பனை செய்யப்படுகிறது.

ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் லட்டு பிரசாதத்தை வாங்கிச் செல்வதற்காக 2 ரூபாய்க்கு பிளாஸ்டிக் கவர்களை வழங்கிக்கொண்டு இருந்தது. ஆனால் இந்த கவரின் விலையானது 3 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவஸ்தானம் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை தடுப்பதற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கும் வண்ணம் கவருக்கு  மாற்று ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக லட்டுவை கொண்டு செல்ல முதலில் அட்டைப் பெட்டிகளை அதிகாரிகள் தயார் செய்ய முடிவு செய்திருந்தனர்.

ஆனால் லட்டுவில் உள்ள நெய் அட்டைப் பெட்டிகளால் உறிஞ்சப்படுவதோடு, பக்தர்கள் அதனை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு லட்டின் தரம் பாதிக்கப்படும். இந்நிலையில் காகிதப் பைகள், துணிப்பைகள் மற்றும் சணல் பைகள் என பல்வேறு வகைகளில் பைகளை கவருக்கு பதிலாக தேவஸ்தானம் விற்பனைக்கு வைத்துள்ளது. அந்த பைகளில் உட்பகுதியில் நெய் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் பொருட்டு ஆயில் காகிதம் வைக்கப்பட்டுள்ளதால் லட்டின் தரம் பாதிக்கப்படாது. இவ்வாறு விற்கப்படும் சணல் பைகள் 15 மற்றும் 25 ரூபாய்க்கும், காகிதப் பைகள் 5 ரூபாய்க்கும், துணிப்பைகள் 11 மற்றும் 9 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Categories

Tech |