Categories
சற்றுமுன் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் 31ஆம் தேதிவரை மூடல் …!!

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம் வரும் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்த நிலையில் ஒருவர் குணமடைந்து கண்காணிப்பில் இருந்து வருகினிற்றார். இதனிடையே தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. பேருந்து போக்குவரத்து சேவை , ரயில் போக்குவரத்து சேவை  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவன உரிமையாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளுக்கிணங்க இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை திருப்பூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பின்னலாடை நிறுவனத்தில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றுவதால் அவர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிக மூடல் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாநிலம் முழுவதும்  நகைக்கடைகளை மூடுவதாக நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Categories

Tech |