இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களில் தொடர் மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பல வங்கிகளும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. குறிப்பாக மொபைல் செயலிகளில் பல பிரச்சனைகள் தொடர்கின்றன. நாம் பயன்படுத்தும் சிம் கார்டுகளுக்கு தெரியாத நபர்களிடமிருந்து போன் கால் அல்லது எஸ் எம் எஸ் வரும். அதில் நம்முடைய தனிநபர் விவரங்களை கொடுத்து விட்டால் நமக்கு மிகப்பெரிய பிரச்சனை தான்.
வங்கி கணக்கிலிருந்து அனைத்து பணமும் திருடப்பட்டுவிடும்.தற்போது ஆன்லைன் படம் மோசடிகள் அதிகரித்து வருவதால் தெரியாத நபர்களிடமிருந்து அழைப்பு மற்றும் எஸ் எம் எஸ் வரும் பட்சத்தில் அதில் நம்முடைய வங்கி கணக்கு விவரங்கள், பான் கார்டு நம்பர், ஓடிபி போன்ற விவரங்கள் கேட்கப்படும். அதனை நாம் வழங்கினால் வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்தும் திருடப்படும்.
இது போன்ற மோசடிகள் தற்போது அதிகமாக நடைபெறுவதால் இந்த வலைகளில் சிக்க வேண்டாம் என தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்களின் டெபிட் கார்டு நம்பர், கிரெடிட் கார்டு, CVV நம்பர், எக்ஸ்பைரி டேட்,ஓடிபி போன்ற எந்த ஒரு தகவலையும் யாரிடமும் பகிர வேண்டாம் எனவும் வங்கி தரப்பில் இருந்து இந்த விவரங்கள் ஒருபோதும் கேட்கப்படாது எனவும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.