Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திமுகவினர் அராஜக செயலுக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம்

பாரதி ஜனதா கட்சி நிர்வாகிகள் திமுக தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து சென்னையில் அக்கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை நங்கநல்லூர் பகுதியில் சுவர் விளம்பரம் செய்வது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகம் பாரதிய ஜனதா  கட்சி இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. வாய்த் தகராறு கைகலப்பாக மாறியதில் திமுக நிர்வாகி சந்திரன் என்பவர் தாக்குதல் நடத்தியதில் பாஜகவை சேர்ந்த சிலர் காயம் அடைந்தனர்.  திமுகவின் இந்த அராஜக செயலுக்குக் கண்டனம் தெரிவித்து சென்னையில் பல இடங்களில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நங்கநல்லூரில் அக்கட்சியின் மாநில தலைவர்  நாகராஜன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்று திமுகவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.  இதேபோன்று வழக்குகளை தலைவர் பால் கனகராஜ் தலைமையில் அண்ணா வளைவு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Categories

Tech |