வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மணல் திருட்டில் ஈடுபடும் திமுக பிரமுகரை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.
வினம்பள்ளி பகுதிக்கு உட்பட்ட சித்தேரி ஏரியில் திமுக பிரமுகர் நாளொன்றுக்கு 10 யூனிட் மணல் எடுத்து டிப்பர் லாரி மூலம் திருடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை, வருவாய்த் துறைக்கு தகவல் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர். குவித்து வைக்கப்பட்டிருந்த ஆறு யூனிட் மணலை பறிமுதல் செய்தனர். மணல் திருட்டை தட்டிக் கேட்ட சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு பாபுக்கு திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.